Home » Articles » கூச்சம் தவிர்!

 
கூச்சம் தவிர்!


மணவழகன் ஜே
Author:

ஊருக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறுகிறீர்கள், அப்போது உங்களுக்கு எந்த விதமான வித்தியாசமான மன உணர்வுகளும் இருக்க வாய்ப்பில்லை. ஒரு பள்ளி பேருந்தில் மாணவர்களும், மாணவிகளும் உள்ளனர். அந்த பேருந்தில் நீங்கள் பயணம் செய்ய நேரிடுகிறது. அப்போது உங்களுக்குள் தோன்றும் ஒருவித மனநிலைதான் “கூச்சம்” (Shyness).

கூச்சம் ஏற்படும் ஒரு சூழல் மேலே கூறப்பட்ட நிலை இதுமட்டுமின்றி, பொது நிகழ்ச்சிகளில் தாமதமாக சென்றால் முன் வரிசையில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் சென்று அமர்வதற்கு ஏற்படும் மனநிலை இந்த கூச்சம்.

இந்த மனநிலை உங்களின் வளர்ச்சி மற்றும முன்னேற்றம் நடைபெறதடையாக இருந்து விடும். “கூச்சத்தை தவிர்”த்திட அதைப்பற்றி அறிந்து கொள்ளலாமா?

சூழ்நிலையின் காரணமாக ஏற்படக் கூடிய கூச்சம் பேருந்து எடுத்துக்காட்டு. பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது பல இடங்களில் தொடர்ந்து காணப்படும் இம் மனநிலை உங்களை சிரமத்திற்குள்ளாக்கிவிடும்.

நான்கு பேருக்கு மூன்று பேர் சூழ்நிலையின் பாதிப்பால் கூச்சம் கொண்டவர்களாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கூச்சத்தினால் பாதிக்கப்பட்டவரின் முதல் பிரச்சினை தான் மட்டுமே. கூச்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று மனோபாவம். அடுத்தது அனைவரும் நம்மை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம்.

மிகைப்படுத்தப்பட்ட கூச்சசுபாவம் உங்களை எந்த வேலையையும் சிறப்பாகச் செய்யவிடாதுச் செய்துவிடும். இது பிறரிடம் பழகுவதற்கும், நெருங்குவதற்கும் ஓர் தடைக்கல்லாகிப் போகும். ஆண், பெண் என்ற எதிரெதிர் பாலினத்தவராக இருக்கக்கூடிய சூழலில் இந்த கூச்ச சுபாவம் அதிகமாகக் காணப்படும்.

பல குழந்தைகளிடமும், கல்லூரி மாணவர்களிடமும் காணப்படும் இப்பழக்கம், தொடர்வதால் திறமை உள்ளவர்கள் கூட தனக்குரிய இடத்தைப் பெற இயலாமல் போய்விடும்.

கூச்சம் தவிர்க்கும் வழிகள்

பள்ளிப் பேருந்தில் செல்கிற உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். பேருந்தில் அமர்ந்தவுடன் அருகிலுள்ள மாணவர் அல்லது மாணவியிடம் உங்கள் பெயரைக் கூறி, மாணவர் அல்லது மாணவியிடம் அவர்களின் பெயர், வகுப்பு, போன்றவை குறித்து விசாரித்துக் கொண்டு உரையாடலைத் தொடரலாம் அல்லது ஓர் அறிமுகம் செய்து கொண்டு விட்டீர்கள் எனில் உங்களது கூச்சம் குறைந்து விட்டிருக்கலாம். அல்லது பேருந்தைவிட்டு இறங்கிச் சென்றிருக்கும்.

காரணம், நீங்கள் அந்த புதிய சூழலுக்கு அறிமுகம் ஆகிவிட்டீர்கள். அந்த இடத்தில் உங்களைப் பற்றி இன்னொருவருக்குத் தெரியும். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தெரிந்த ஒருவர் இருக்கும் போது கூச்சம் அங்கே இருக்காது.

புராணங்களில் விசுவாமித்திரர் என்றொரு முனிவர் இருப்பார். விசுவம் என்றால் உலகம் மித்ரர் என்றால் நண்பர் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

நாமும் நாம் செல்லும் இடங்களில் பிறரை நண்பர்களாக நினைத்தால், பாவித்தால், நமது கூச்சம் தலையெடுக்காது. நண்பர்களோடு இருக்கும் போது கூச்சத்திற்கென்ன வேலை?

தன்னம்பிக்கை பயிலரங்குகளில் எனது பயிற்சி துவங்கும் முன்பு அனைவரையும் இடம் மாறி அமர்ந்திடுமாறு கேட்டுக் கொள்வேன். இடம்மாறி அமரும் போது பழகாத புதிய நபரின் அருகில் அமரும் ஓர் நல்ல வாய்ப்பு அப்போது கிடைக்கும். இதுபோல் புதிய நபர்களுடன் அமரும்போது அறிமுகம் ஆகிடும் போதும், கூச்சம் குறைந்திடும்.

பொது நிகழ்வுகளில் பங்கேற்பதும், பணி செய்வதும்,பொறுப்பேற்றுக் கொள்வதும் கூச்சம் போக்கும் நல்ல வழிகள்.

புன்னகையைப் பயன்படுத்துங்கள். கூச்சத்தை நீக்கி புதியவர்களிடம் அறிமுகமாக ஓர் எளிதான வழி.

கூச்சம் என்பது நீங்கள் உருவாக்கிக் கொண்ட ஒரு தடைக்கல். அதை ஒரே நாளில் வெடி வைத்து தகர்த்திட இயலாது. மாறாக சிறிது சிறிதாக வெட்டி எடுத்துவிட முடியும். எனவே ஒவ்வொரு புதியச் சூழலிலும் கூச்ச சுபாவத்தை குறைத்து பின்பு நீக்கிடுதல் சாதிக்க உதவிடும்.


Share
 

1 Comment

  1. P KASIRAJ says:

    MUZHU UNMAI MIKKA NANDRI

Post a Comment


 
 


April 2007

ஜெயிக்கும் நட்சத்திரம்
இணைந்து பணியாற்றுக
சாதிக்கத் தூண்டிய சாதனையாளர்
இதுதான் வாழ்க்கை
இளைஞனே உனை மாற்று!
நங்கூரம்
புதிதாய் பிறந்தோம்
வளைதல்
இல.செ.க.வின் சிந்தனை
திறந்த உள்ளம்
இனி மேலாவது..
நிராகரிப்பே நிராயுதபாணியின் ஆயுதம்
மன அழுத்தத்தை வெல்ல 20 வழிகள்
அலட்சியம் வேண்டாமே
பயிலரங்கச் செய்திகள்
துன்பத்தைக் குறைப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
விடைபெறும் வினாக்கள்
என்ன செய்தால் எண்ணியதை அடையலாம்?
சக்சஸ் உங்கள் சாய்ஸ்!
உள்ளத்தோடு உள்ளம்
கூச்சம் தவிர்!
திருக்குறளில் அன்பு – ஓர் அறிமுகம்
திட்டம் – கனவு – செயல் – வெற்றி