![]() |
Author: மாரிமுத்துராஜ் A.G
|
ஏன் இப்படி நான் நடந்து கொள்கிறேன்? என்று கேட்பதற்கு முன், அந்தச் செயலுக்கு விதையான எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். காரணங்கள் புரிய வரும்.
ஒருவரின் முடிவுக்கான காரணத்தை அவனைத் தவிர எவராலும் சரியாக சொல்ல முடியாது. ஒருவரின் முடிவை, நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனம் செய்ய முடியும் . அதைப் பார்க்கும் கடைசிப் போக்கை பொறுத்தது அது.
உங்களின் தேர்வே உங்களின் தேடுதலை உறுதிப்படுத்தும்.
மிகச்சிறிய தூண்டுதலில், மிகப்பெரிய மாற்றம் நிகழக்கூடும். ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது.
மனித மனம் அச்சத்தை சுலபமாக உள்வாங்கி வரும் அதனால் தான் உலகம் அதை மையப்படுத்தியே ஓடிக்கொண்டே இருக்கின்றது.
அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, வளர நிறைய முயற்சியும், பயிற்சியும் தேவைப்படுகின்றன.
நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றிய நாம்எண்ணும் எண்ணங்கள் நம்மை துன்புறுத்துகின்றன.
கணீரென்று பேசுங்கள். நம் மனம் எந்த மனநிலையை இருக்கிறதோ. அதற்கேற்ற நிகழ்வுகள் தான் நம்மைத் தொடரும்.
முன்கூட்டியே தீர்மானிக்கும் எண்ணங்கள், நாம் நம்பும் விளைவுகளைத் தந்து அந்த எண்ணங்களை வலுப்படுத்தும். காலப் போக்கில் அந்த எண்ணங்கள் அனுபவத்தால் வந்தால் அபிப்பிராயங்களால் மனம் பதிவு செய்து கொள்ளும். இது தான் மனம் செய்யும் தந்திரம். நம் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் இது தான் நடக்கிறது.
உங்கள் வாழ்க்கையின் பெரும் பிரச்சனை எது என்று யோசியுங்கள் அது குறித்த உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். அவற்றில் ஏதாவது தெரிகிறதா என்று பாருங்கள். அப்படியானால் உங்கள் வாழ்க்கைத் திருப்பிப் போடும் வகையில் நீங்கள் கை வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
இந்த இதழை மேலும்

Share

January 2020




















No comments
Be the first one to leave a comment.