![]() |
Author: அனந்தகுமார் இரா
|
1. தயக்கம் என்பது தாய்மொழி:
இளமாறன் புன்னகைத்தார். தன் மகன்கள் இருவரையும் பாராட்டினார். வெண்ணிலவன், வலிமைச்செல்வன் இருவருமே அவருக்கு இரு கண்கள் போல. பெயருக்கேற்ப வெண்ணிலவன் அமைதியானவன், செல்வனோ கொஞ்சம் ஆற்றல் காட்டுபவன். வெண்ணிலவனை பள்ளி பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதுதான் இந்தக்கதை தொடங்கியிருக்கிறது. இரு பையன்களுமே ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார்கள்.
அடுத்த நாள் வகுப்பறைக் காட்சியை உங்களுக்குக் காட்டுகிறோம். நீங்கள் கூட இந்த சூழ்நிலையைக் கடந்து வந்திருப்பீர்கள். தயக்கம். நிலவனுக்கு எதற்கும் தயக்கம். எழுதுவது என்றால் சரி! எவ்வளவு என்றாலும் எழுதலாம். ஆனால் இதுவரை பேசியதே இல்லையே… நான் எப்படிப் பேசப் போகிறேன். கடவுளே… அப்பா வேறு சொல்லிஅனுப்பி இருக்கிறாரே! சிக்கலில் மாட்டிக்கொண்டோமே!
“யார் யார் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ளப் போகிறீர்கள்?”
என்று கேட்டார் அஞ்சலிடீச்சர்…
அவருடைய கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து விலகினான் நிலவன்.
பக்கத்திலிருந்த, பண்பழகன் கை உயர்ந்தது. அவன் ஒரு அதிர்வேட்டுப் பேச்சாலன். பேசமாட்டான்… முழங்குவான்! நாம் சும்மா இருப்பதே நல்லது… அப்பா கேட்டால்… அப்போ பார்த்துக்கலாம்… வகுப்பு முழுக்க நம்மைப் பார்க்கையில் நம்மால் எப்படிப் பேச முடியும்! ஒரே கூச்சமாக இருக்குமே! என்று தயங்கினான் வெண்ணிலவன். இளமாறனின் அறிவுரை மனதில் வந்து போனது. லேசாக கைகள் முன்னெற்றி ஆகியவை வியர்த்தன.
2.வாய்ப்பு என்பது வாய்மொழி:-
இன்னும் சில மாணவ மாணவியர் பெயர்களைக் கொடுத்தார்கள். பல்லவி வாயெல்லாம் பல்லோடு என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று கேட்ட பொழுது நிலவனுக்கு தலை சுத்தியது. அந்த வகுப்பு எப்படித்தான் முடிந்தது…?
எப்பொழுது முடிந்தது என்றே வெண்ணிலவனுக்குத் தெரியவில்லை.
“கேரோஸ்” (இஹங்ழ்ன்ள்) என்றார் இளமாறன். அது அடுத்த நாள். ‘இ’ என்கிற எழுத்தில் தொடங்கும் சொல்லானாலும் அதன் முதல் உச்சரிப்பு ‘கே’ தான். கேரட் மாதிரி என்றார் இளமாறன். இது ஒரு கிரேக்க கடவுள். நம் ஊரில் ‘குபேரன்’ என்றால் செல்வன் என்பது போல கிரேக்க புராணத்தில் கேரோஸ் என்றால் வாய்ப்பு. அதுல என்ன கவனிக்க வேண்டும்னா இந்த ‘கேரோஸ்’ வாய்ப்புக்கடவுளோட முன்தலையில் மட்டும் முடி இருக்கும் பின்னாடி வழுக்கை. வாய்ப்பு வரும்போது பிடிக்காவிட்டால் அது கடந்து போன பிறகு வழுக்கிக்கொண்டு போய்விடும். என்ன? பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டாயா? என்றார் இளமாறன்!
3.உடும்புப்பிடி
அப்பா வழுக்கைத் தலையைப் பிடிக்க முயற்சி செய்தேன்! என்று கூறினான் வெண்ணிலவன். அடடா… நிலவா… நான் கூறினேனே! உனக்கு என்ன தயக்கம் தருகிறதோ… அதை துணிவோடு எதிர்கொள்கிற ஆற்றல் எங்கிருந்து வரும் தெரியுமா? கேரோஸிடமிருந்தா? அப்பா என்று கேள்விக்குக் கேள்வியை போட்டான் நிலவன்!
இந்த நக்கலுக்கொன்றும் குறைவில்லை, குறும்புக்காரப் பையா… அந்தத் தயக்கத்தை வெல்லும் ஆர்வம் உன்னுள் இருந்து வரவேண்டும்! அதுவே நிலைக்கும். என்றார்… இப்பொழுது என்ன செய்வது அப்பா… வாய்ப்பை வழுக்க விட்டுவிட்டேனே! என்று சோர்ந்தான் நிலவன். அட வள்ளுவர் வழி சொல்வார் தம்பி….
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்
குறள்எண் 593 ல் ஊக்கமுடைமை அதிகாரத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார். ஒரு வாய்ப்பை நழுவ விட்டாலும் அதனால் வரும் இனிய ஆக்கத்தை இழந்தாலும் நம்மால் முடியும் என்று ஊக்கம் உள்ளவர்கள் கலங்கி நிற்க மாட்டார்கள் என்றார், மாறன்.
சிறப்புஅப்பா… நாளைக்குச் சென்று அஞ்சலி மேடத்தைப் பார்த்து என் பெயரை ‘கேரோஸ்’ என்ற தலைப்பில் பேசுவேன் என்று தரப்போகிறேன்!
4. இரண்டாவது வழி:
கிளை பிரியும் தோட்டம் – என்றார் இளமாறன்.
அப்பா இது என்ன? என்றான்
அர்ஜென்டீன எழுத்தாளர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே அவருடைய ஆங்கில ஸ்பெல்லிங்க் ஆர்ழ்ஞ்ங்ள் – ஆனால் அர்ஜென்டீன மொழி உச்சரிப்பு போர்ஹே… இவர் எழுதிய கதைதான் ‘கிளை பிரியும் தோட்டம்’ அதை எதுக்குப்பா இப்போ சொல்றீங்க? தம்பி, நிலவா, நம்ம கதையில கூட அப்படிக் கிளை பிரியலாம்!
ஆமாம்ப்பா… நான் உங்களிடம், பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டேன் என்று சொல்லி இருந்தால்…
அப்படியா…?
ஆமாம் அப்படியே சொல்லியிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் பின்னாடிப் போய் பார்த்தால் இந்தக் கதையில் என்ன நடந்தது அந்த வகுப்பு முடியும் போது? என்று இருக்காது!
அதனால் எனது வாக்குமூலத்தை மாற்றிச் சொல்கிறேன்…
அப்பா தன்னம்பிக்கையோடு பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டேன். மிகச் சிறப்பு நிலவா நன்றாகப் பேசு. என்று இளமாறன் மகிழ்ச்சியோடு இரவு உணவு உண்ண எழுந்து சென்றார்.
இந்த இதழை மேலும்

Share

January 2020




















No comments
Be the first one to leave a comment.