Home » Articles » ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?

 
ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

வாழ்க்கையை ஜெயிப்பது என்பது சரியல்ல எனத் தெரிந்து கொண்டீர்கள் தானே!

அப்படியென்றால் நாம் வாழும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். அதுவும் எல்லோருமே ஜெயிக்க வேண்டும்.

இதை WIN-WIN FORMULA என ஆங்கிலத்தில் சொல்வர். இதன் பொருள் நாமும் வெற்றி பெறுவோம். மற்றவர்களையும் வெற்றி பெறச் செய்வோம் என்பது தான்.

தன்னம்பிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையே இல்லாத ஒருவன் இருந்தால் ஒன்று  அவன் பயந்து ஓடிவிடுவான் ; அல்லது அவர்களது தன்னம்பிக்கையின் அழுத்ததால் இவனும் தன்னம்பிக்கையாளாக மாறுவான்.

ஓட்டு வீடுகளும், குடிசைகளும் நிறைந்த பகுதி. மிகவும் விலை குறைவாகக் கிடைக்கிறது என நிலத்தை வாங்கி, அரண்மனை போன்ற வீட்டைக்கட்டி, அதில் வசிக்கும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்?

எதற்காக இந்தப்பகுதியில் வசிக்க வேண்டுமென வேறிடம் செல்வாரா? அல்லது தன் வீட்டைச்சுற்றியுள்ளவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கு திட்டமிட்டு செயல்படுவாரா?

பிரச்சனைகளையும் சவால்களையும் இனம் கண்டுபிடித்துவிட்டால், செயல்பாடு சுலபமாகிவிடும். இதை இனம் காண்பதில் பெரும் பாலானவர்களுக்கு குழப்பம்.

விளக்கம் இதோ:

அகச்சூழல், புறச்சூழல் என்பதை முதலில் விளக்கிக் கொள்வோம்.

அகச்சூழல் என்பதுஒவ்வொருவரிடமும் உள்ள தகுதிகள், திறமைகள், பயிற்சிகள், தன்னம்பிக்கை விழிப்புநிலை, காலம்அறிந்து செயல்படுதல் போன்றவை.

புறச்சூழல் என்பது ஒருவர் ஒன்றை எதிர்கொள்ளும் இடம், காலம், இயற்கை உள்ளிட்டவைகளாகும்.

நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்பவைகளை இரண்டாகப் பிரிக்கலாம். 1- சவால் ; 2- பிரச்னை.

சவால் என்பதை ஆங்கிலத்தில் இஏஅககஉசஎஉ என்கிறோம். எதிர்கொள்ளும் சூழல் அவரிடமுள்ள திறமைகளால் எளிதாக செய்து விட முடியும் என்பதே சவால்.

1. இருசக்கரவாகனத்தில் நகரின் முக்கிய சாலையில் பயணிக்கிறோம். திடீரென டயர் பஞ்சராகிவிட்டது. இதை சுலபமாகச் சரிசெய்து விடலாம். ஓரமாக வாகனத்தை நிறுத்தி, அவசர வேலை இருந்தால் முடித்த பின்னர் கூட பஞ்சரை சரி செய்து ஓட்டிச் செல்லலாம். இது சவால்.

2 கடும் வெயில்; நடந்து செல்கிறோம். வழியில் ஒருவருமே தென்படவில்லை ; சாலையோரம் மரங்களுமில்லை ;கண்ணுக்கெட்டிய தூரம் வீடுகளும் தெரியவில்லை.

நாவறண்டு கடும் தண்ணீர் தாகம் ஏற்பட்டுவிட்டது. கையிலும் தண்ணீரில்லை ; வெளியில் எங்கும் தண்ணீரில்லை. மயங்கி விழும் நிலை இந்தச் சூழல் தான் பிரச்சனை என்பது.

பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தன் திறமைகள் மட்டும் போதாது ; வெளியிலிருந்து பெறும் ஆலோசனைகளும் உதவிகளும் கட்டாயம் தேவை.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 
 


January 2020

எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்
தன்னம்பிக்கை மேடை
நேர்மையின் பரிசு
கபடியில் தடம் பதித்த சாதனையாளர்
பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..
பிரசவம்
அன்பும் அறனும் உடைத்தாயின். . .
தடம் பதித்த மா மனிதர்கள்
சொத்து
வெற்றி உங்கள் கையில் – 73
நேரம் ஒரு மூலதனம்..
இளம் இரவிவர்மா…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16
விரட்டுங்கள் மனச்சோர்வை
நில்! கவனி !! புறப்படு !!! – 11
ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
“ சரிவுக்கு தீர்வு… சரியான தேர்வு! ”
அறிவியலா? இலக்கியமா?
சின்னஞ்சிறு சிந்தனைகள்
உள்ளத்தோடு உள்ளம்