![]() |
Author: மித்ரன் ஸ்ரீராம்
|
மகிழ்ச்சித்தருணங்கள் ! (பாதை 10)
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !
அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்– ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான என் லட்சியம்.
அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.
மகிழ்ச்சித்தருணங்கள் !
அனைவருக்கும் பாரபட்சம் இன்றி கிடைத்திருப்பது 24 மணிநேரம் தான். பங்கிடவே முடியாத இந்த பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த அளவு வாழ்வை வாழ்கிறீர்கள் என்பதில் தான் சூட்சுமமே.
உலகப்பெரும் பணக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், தொழில் உலக சக்ரவர்த்தி, அறிவையே வியக்க வைக்கும் விஞ்ஞானி, ஆண்டவனை அடையாளம் காட்டும் ஆன்மீகத் தந்தை – அவர்க்கு மட்டுமல்ல,,,
பொய், களவு, சூது, நம்பிக்கை துரோகம், பஞ்ச மகா பாதகங்களின் மொத்த குத்தகை, களவானிகளின் பட்டியல் இருந்து உய்ஸ்ரீர்ன்ய்ற்ங்ழ் பட்டியலுக்கு ஏற்றுமதி ஆனவன், – இவர்களுக்கு மட்டுமல்ல ,,,
முன்னேற முடியும் என்ற கொள்கையில் முயற்சி செய்யும் சாமானியன், உழைப்பே உயர்வுக்கு வழி என்று வாழும் தொழிலாளி, நாளைய விடியல் நிச்சயம் எனக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தும் அப்பாவி – அவர்க்கும் பொதுவானதே இந்த 24 மணி நேரம்.
காற்றில் மிதந்து வந்த கண்ணதாசனின் பாடல் ஒன்று.
“கடவுள்ஒருநாள்உலகைக்கானதனியேவந்தானாம்
கண்ணில் கண்ட மனிதர்களை எல்லாம் நலமா என்றானாம்.
ஒருமனிதன்வாழ்வைஇனிமைஎன்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்” – என்று.
ஆமாம். கடவுள் சிரிப்பின் உண்மையான காரணம் இது தான்.
ஒரே அளவு நேரத்தில் நீங்கள் எந்த அளவு முறையாக, சரியாக பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதில் தான் உங்கள் வாழ்க்கையே இருக்கிறது.
கிடைத்திருக்கும் நேரத்துக்கு முதலில் நீங்கள் மகிழுங்கள். எந்த நிலையில் நீங்கள் இன்று இருந்தாலும் அந்த நிலைக்கு முதலில் மகிழுங்கள். இன்னும் அதிகம் இன்பம் தேவையாக இருந்தாலும் – இப்போது கிடைத்திருக்கும் இன்பத் தருணத்திற்கு மகிழுங்கள். மகிழ்ச்சி ஆற்றில் குளிக்க விழைந்தாலும் இப்போது உழன்று கொண்டிருக்கும் துன்பச்சேற்றில் இருந்துகொண்டே இந்த தருணத்திற்கு மகிழுங்கள். அறிவாளி என்று நாளை ஊரே புகழும் காலம் வரும் வரை – இப்போதைய ஏமாளி என்ற துன்பத்தருனத்திலும் மகிழுங்கள்.
உங்களுக்கு திருவோடு இருப்பதில் மகிழ்ச்சியா – அல்லது திருவோட்டில் இருப்பதற்கு மகிழ்ச்சியா? – என்பதை உங்கள் மனம் தான் முடிவு செய்ய வேண்டும்.
உங்களது 24 மணி நேரத்தில் எத்தனை மகிழ்ச்சித் தருணங்களை உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
அதெல்லாம் சரி! மகிழ்ச்சித் தருணம் என்றால் என்ன?
பரந்துபட்ட பொறுப்புக்கள், கடினமான சூழ்நிலைகள், மோசமான முதலாளி – இதுபோன்று பல நிர்பந்தங்களுக்கும் மத்தியில் மன அமைதி குலையாமல் இருப்பது எப்படி என்று கற்றுத்தெளிவதே “மகிழ்ச்சித்தருணங்கள் !
அதாவது சூழலை துன்பமாக எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சி என்றே ஏற்பது.
ஒவ்வொரு சந்தர்பத்திலும் நீங்கள் எடுத்த தேர்வுகளே இன்றைய உங்கள் நிலை. துன்பத்தருணம் என்றாலும் மகிழ்ச்சித்தருணம் என்றாலும் சரி சூழ்நிலைகள், சூழல்கள் மாற வேண்டுமானால் – உங்களுக்கான தேர்வுகளை நீங்கள் தான் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
இந்த இதழை மேலும்

Share

January 2020




















No comments
Be the first one to leave a comment.