Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16


ஞானசேகரன் தே
Author:

101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்

(101 Promises worth keeping)

இந்த நூலின் ஆசிரியர் நீல் எஸ்கெலின் (Nil Eskelin) ஆவார். (தமிழில் லலிதா கல்யாண சுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.) இந்நூல் பின்வரும் ஐந்து இயல்களில் அமைந்துள்ளது.

1. குடும்பம் மற்றும் நண்பர்களுக்குத் தரும் வாக்குறுதிகள்.

2. உங்கள் உதவியாளர்களுக்குத் தரும் வாக்குறுதிகள்.

3. எனக்கு நானே தரும் வாக்குறுதிகள்.

4. என் உலகத்துக்கு நான் அளிக்கும் வாக்குறுதிகள்.

5. என்னை படைத்த இறைவனுக்குத் தரும் வாக்குறுதிகள்.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவுகளில் 101 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலின் முன்னுரை இப்படித் தொடங்குகிறது.

ஒரு நாள் மாலை பையன் அப்பாவிடம் கேட்டான், இன்னிக்கி ராத்திரி சாப்பிட்டப்புறம் பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரீம் கடைக்குப் போலாமா?”

அப்பாவும்போலாம்என்றார்.

பையனுக்குநம்பிக்கைவரவில்லை, “பிராமிஸ்?”

அப்பா, “.கே. ப்ராமிஸ்.”

திங்கட்கிழமை இரவு கால் பந்தாட்டத்தைக் காரணம் காட்டி அப்பா பின் வாங்கி விட்டதில் பையனுக்கு ரொம்ப ஏமாற்றம், அப்பாவின் இமேஜ் பாழாகிவிட்டது.

வாழ்க்கையின் ஒவ்வொரு களத்திலும், வீடாகட்டும், வியாபாரமாகட்டும் அல்லது சமூகமாகட்டும் நாம் நமது வாக்குறுதிகளால் அல்ல, நமது செயல்பாடுகளால் மட்டுமே அளக்கப்படுகிறோம். காக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியும், நமது வாழ்க்கை அஸ்திவாரத்திற்கு ஒரு கல். போதுமான அளவு கற்கள் இடப்பட்டதும் நீங்கள் உறுதியான, நம்பகமாக ஒரு கட்டிடத்தை எழுப்பலாம்.

வாக்குறுதிகள் கொடுப்பதோடு வேலை முடிந்து விடுவதில்லை. அவற்றை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் காக்க வேண்டும். 101 வாக்குறுதிகளில் ஒருசில வாக்குறுதிகளை வருமாறு காண்போம்.

எனது திருமண பந்தத்தைக் காக்க நான் உறுதி கூறுகிறேன்

ஹென்றிபோர்டின் 50வது திருமண ஆண்டு நிறைவின்போது, “உங்கள் மகிழ்ச்சியான இல்லறத்தின் ரகசியம் என்ன? என்று ஒரு நிருபர் அவரைக் கேட்டார்.

சிறிது கூடத் தயங்காமல் உடனே ஃபோர்ட் கூறிய பதில் இதுதான். “என் பிசினெசை வெற்றிகரமாக்கிய அதே பார்முலாதான், ஒரே மாடலை வைத்திருக்க வேண்டும் என்றார்.

இன்றைய பயமுறுத்தும் விவாகரத்து புள்ளி விவரங்கள் நமக்குக் காட்டுவது, பிரச்சினை திருமணத்தில் அல்ல, ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து தம்பதிகள் பிரச்சினைகளையும், அழுத்தத்தையும் சந்தித்து வந்திருக்கிறார்கள்.உண்மையான அவலம் என்னவென்றால் ஒட்டுறவில்தான் பிரச்சினை. மக்கள் உண்மையாக நடந்துகொள்வதில்லை.

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரும் வாக்குறுதி நழுவக் கூடிய ஓட்டைகள் நிறைந்த ஒப்பந்தமல்ல, அது ஒரு நிரந்தர புனித உடன்படிக்கை. இவ்வாறாக ஒவ்வொரு வாக்குறுதி பற்றியும் மிக அர்த்தமிக்க எடுத்துக்காட்டுக்களுடன் இந்நூலாசிரியர் வாக்குறுதியின் அடர்த்தியை சுருக்கமாக விவரித்துச் செல்கிறார். இந்நூலை ஒரேமட்டில் ஒரு நாவலைப் படிப்பதுபோல படித்துவிட முடியாது. நின்று நிதானித்து நம் வாழ்க்கையுடனும் நாம் கொடுத்துள்ள வாக்குறுதிகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்து; மிகக் கவனமாகப் படிக்க வேண்டிய நூல் இந்நூல். ஒவ்வொரு வாக்குறுதியை விளக்குவதற்காக நீல் எஸ்கெலின் எடுத்துக்காட்டும் கதைகள், உதாரணங்கள் மிகச் சிறப்பானவை ஆகும்.

நான் என் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருப்பேன்

ஒவ்வொரு தாய் தகப்பனும் கூடிய சீக்கிரம் தன்னைப் போலவே தன் மக்களும் தயாராவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னை முன் மாதிரியாக நினைத்துக்கொள்ள வேண்டும். நல்லவரோ, கெட்டவரோ, நேர்மையானவரோ, ஏமாற்றுக்காரரோ, ஒழுக்கமானவரோ, ஒழுக்கமற்றவரோ, நாம் தான் நம் குழந்தைகளுக்கு அளவுகோல்களை நிர்ணயிக்கிறோம். ஒரு குழந்தை சமுதாயமெனும் நெசவில் இறுதியில் எப்படி இடம்பெறுகிறது என்பதில் தாய் தகப்பனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஒரு முக்கியமான இழையோட்டமாகிறது. இதேபோன்று குடும்பம் பற்றி அமையும் வாக்குறுதிகளில் சில வருமாறு.

என் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரத்தைப் பொக்கிஷமாகக் கருதுவேன்.

ஒரு நல்ல சூழ்நிலையை வீட்டில் பராமரிக்க உறுதி கூறுகிறேன்.

என் குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்புக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நம் இல்லம் மகிழ்ச்சியாலும் சிரிப்பாலும் நிறைந்திருக்கும்.

நான் என் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருவேன்.

நான் எனது அன்பையும் பாசத்தையும் காட்ட உறுதி கூறுகிறேன்.

நன்றி கூற ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

நான் கருணையுடையவனாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

அடுத்தவர் கருத்தை மதிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

தீங்கான விமர்சனத்தைத் தவிர்ப்பேன்.

அடுத்தவர்களை எடைபோடுவதை நிறுத்திவிடுவேன்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 
 


January 2020

எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்
தன்னம்பிக்கை மேடை
நேர்மையின் பரிசு
கபடியில் தடம் பதித்த சாதனையாளர்
பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..
பிரசவம்
அன்பும் அறனும் உடைத்தாயின். . .
தடம் பதித்த மா மனிதர்கள்
சொத்து
வெற்றி உங்கள் கையில் – 73
நேரம் ஒரு மூலதனம்..
இளம் இரவிவர்மா…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16
விரட்டுங்கள் மனச்சோர்வை
நில்! கவனி !! புறப்படு !!! – 11
ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
“ சரிவுக்கு தீர்வு… சரியான தேர்வு! ”
அறிவியலா? இலக்கியமா?
சின்னஞ்சிறு சிந்தனைகள்
உள்ளத்தோடு உள்ளம்