வேகமாகச்செல், வேகமாகச் செல். உன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள வேகமாகச் செல். இந்த எழுத்துக்கள் எட்டாம் ஹென்றி காலத்தில் தபால் உறையின் மீது எழுதப்பட்டிருந்தது.
தபால் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் அரசாங்கத்துத் தூதுவர்களே கடிதங்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் வழியில் தாமதித்தால் என்ன தண்டனை தெரியுமா? மரணதண்டனை.
நாம் இன்று சில மணி நேரத்தில் கடந்து செல்லும் தூரத்தை வாரக்கணக்கில் நடந்து செல்ல வேண்டி இருந்த காலக்கட்டத்திலும் கூட தாமதமானது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.
அந்தக் காலத்தில் உள்ளவர்கள் ஒரு நாளில் செய்ய வேண்டிய காரியத்தை இன்று ஒரு மணி நேரத்தல் செய்து முடிக்கும் வகையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கும் பொழுது.
அன்று அனாவசிய தேவையற்ற தாமத்திற்கு மரண தண்டனை என்றால் இன்று அவ்வித குற்றத்திற்கு என்ன தண்டனை அளிக்கப்பட வேண்டும்?
சோம்பேறித்தனத்தின் காரணமாக ஏற்பட்ட அனாவசியத் தாமத்தால் உலகில் ஏற்பட்ட அழிவுகள் அளவிட முடியாதவை. எத்தனையோ பேரரசுகள் சரிந்திருக்கின்றன. எத்தனை முடியரசுகள் கவிழ்ந்து உள்ளது.
எனவே தான் நெப்போலியன் கூறினார், இழந்தவிட்ட ஒவ்வொரு நிமிடமும் துயரத்திற்குச் சந்தர்ப்பம் அளிக்கிறது. உடனுக்குடன் காரியங்களை ஒழுங்காக செய்வது போன்று நமக்கு வெற்றி மாலை சூட்டக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
இதே போன்று செய்ய வேண்டியதை ஓத்திப்போட்டு கொண்டு செல்லது போல துன்பப்படுகுழியில் தள்ளக்கூடியதும் வேறு ஒன்றும் இல்லை.
காலம் என்னும் கடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் இப்பொழுதே என்பது தான். அது தான் வெற்றி வீரனின் தாரக மந்திரமாகும்.
பின்பு அப்புறம், பிறகு என்பது தோல்வியின் தோழமைச்சொல் அன்றாடம் செய்யப்பட்டிருக்க வேண்டிய வேலைகளை ஒத்திப் போட்டால் அவை மலை போல்குவிந்து மலைக்க வைத்துவிடும்.
இப்படித்தான் நம்முடைய வாழ்வில் ஒழுங்கினங்களும் தன்னுடைய கொடி உருவத்தைக் காட்டத் தொடங்குகிறது அதனால் நம்முடைய வாழ்வு சிறப்பின்றி சீதனம் குன்றி அமைந்து விடுகிறது.
செய்ய வேண்டிய வேலையை உடனுக்கு உடன் செய்யாமல் இருப்பது வாழ்க்கையின் வெற்றி சக்கரத்தை ஒட செய்யாமல் செய்து விடும்.
ஒரு வேலையை ஒத்திப் போடுவது என்றால் என்ன? அதைப் புதைக்குழியில் போட்டு மூடிவிடுவது தான், பின்பு பார்ப்பது இல்லை என்பது தான்.
ஒரு வேலையைச் செய்வது ஒரு விதையை விதைப்பது போலாகும். அது உரிய காலத்தில் நடவு நட்டப்படவில்லை பலன் அதற்கு ஏற்றார் போல் தான் இருக்கும்.
எனவே இப்பொழுது என்பது நமக்கு அருளப்பட்டிருக்கும் மாணிக்கம். அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோசையை சுடச்சுடச் சாப்பிடும் சுவை, அது ஆறிய பின்பு இருக்குமா?
இதே போன்று தான் தள்ளிப் போடப்பட்டிருக்கும் வேலையும் இருக்கும். இதனால் நமக்கு உற்சாகம் குறைந்து விடுவதோடு, நம்முடைய ஆற்றலையும் சக்தியையும் இழக்கும்படி செய்து விடுகின்றது.
இந்த இதழை மேலும்

Share

January 2020




















No comments
Be the first one to leave a comment.