![]() |
Author: கவிநேசன் நெல்லை
|
நேர்மை தந்த பரிசு
“இந்தக்காலத்தில் நேர்மையாக இருந்தால் வாழ முடியாது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வாழ முடியும்” – இது சிலரின் ஏக்கப் பெருமூச்சு.
“யாரையாவது ஏமாற்றினால்தான் முன்னுக்கு வரமுடியும்” – இது வேறுசிலரின் வேதனை கலந்த வார்த்தைகள்.
“நல்லவர்களுக்கெல்லாம் எதிர்காலம் கிடையாது. நயவஞ்சகர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்” – இதுவும் சிலரின் ஏமாற்றம் கலந்த எண்ணங்கள்.
“உண்மையாக வாழ்ந்தால் பதவி கிடைக்காது. குறுக்குவழியில் சம்பாதித்தால்தான் பணம் கிடைக்கும்” – இப்படியும் சிலர் நினைத்து செயல்படுவதால், முடிவில் சிறைக்கம்பிகளை எண்ணும் நிலையும் உருவாகிவிடுகிறது.
“நேர்மையாக வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாதா?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சில இளைஞர்கள் தங்கள் பாதையில் தடம் புரளுகிறார்கள். “நேர்மையோடு வாழ்பவர்களின் வெற்றி நிரந்தரமாய் அமையும்” என்பதைப் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையை ரசிக்கிறார்கள்.
அது ஒரு மிகப்பெரிய ஆலை.
அந்த ஆலையை சிறிய ஆலையாகத் தொடங்கியவர் ராஜாராம். பின்னர், மிகப்பெரிய ஆலையாக மாற்றியப் பெருமை அவரையே சாரும்.
பல வருடங்களாக அந்த நிறுவனத்தை வளர்த்து, நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த ராஜாராம், அந்த நிறுவனத்தின் பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுக்க முடிவு செய்தார்.
வயதான நிலையில் இன்னொரு நிர்வாக இயக்குநரை தேர்ந்தெடுக்கவும் திறமையானவரை கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தார். தனது ஆலையில் பணிபுரிந்த அனுபவமிக்க பணியாளர்களை அழைத்தார்.
“நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வுப் பெறப்போகிறேன். எனக்குப் பின்னர் இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிய உங்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறேன். உங்களில் ஒருவரைத் தேர்வு செய்ய நான் ஒரு போட்டி நடத்தப்போகிறேன். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்தான் எனக்குப்பின் பொறுப்பேற்கும் இந்த ஆலையின் நிர்வாக இயக்குநர்” – என நிர்வாக இயக்குநர் ராஜாராம் சொன்னதும் பணியாளர்கள் ஆர்வத்தோடு கவனித்தார்கள்.
நிர்வாக இயக்குநர் மீண்டும் தொடர்ந்தார்.
“என்னிடம் இப்போது பலவகையான விதைகள் உள்ளன. இந்த விதைகளை நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒன்றாகத் தருகிறேன். எந்த விதை யாருக்குத் தருகிறேன் என்று எனக்கே தெரியாது. நீங்கள் உங்கள் வீட்டிற்கு இந்த விதையைக் கொண்டு செல்லுங்கள். வீட்டில் ஒரு தொட்டியில் இந்த விதையை ஊன்றுங்கள். நன்றாக நீர் ஊற்றி வளருங்கள். தேவையான உரமிடுங்கள். அடுத்த ஆண்டு இந்தச்செடி நன்றாக வளர்ந்தபின் நீங்கள் என்னிடம் அதனைக் காட்ட வேண்டும். அப்போது யாருடைய செடி செழிப்பாக உயர்ந்து வளர்ந்திருக்கிறதோ அவர்தான் எனது ஆலையின் முழு பொறுப்பையும் கவனிக்கும் நிர்வாக இயக்குநராக பதவியேற்பார்” என்றுசொல்| போட்டியை ஆரம்பித்தார்.
நிர்வாக இயக்குநர் கொடுத்த விதையை அந்தப் பணியாளர்கள் வாங்கிச் சென்றார்கள். பணியாளர்களில் ஒருவர்தான் ராஜன். தனக்கு கிடைத்த விதையை வீட்டிற்கு வாங்கிக்கொண்டுவந்து தனது மனைவியிடம் காண்பித்தார்.
இந்த இதழை மேலும்

Share

January 2020




















No comments
Be the first one to leave a comment.