Home » Articles » தடம் பதித்த மா மனிதர்கள்

 
தடம் பதித்த மா மனிதர்கள்


கிரிஜா இராசாராம்
Author:

நம் தாய்நாடான இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலர். விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் கலந்து கொள்ளும் முன் கலந்து கொண்ட பெரிய தலைவர்களின் ஒருவர் வ..சிதம்பரம் பிள்ளை அவர்களும் ஒருவர் ஆவார். அவருடைய வாழ்க்கை வரலாற்றில் இருந்து சில நிகழ்வுகளை இக்கட்டுரை மூலம் பதிவு செய்வதால் பல்வேறு இளைஞர்கள் பலன் பெருவார்கள் என்பது உறுதி. ஏனெனில் அவரது நினைவு சின்னங்கள் பற்றிய குறிப்புகள் கீழே வரிசை படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டப்பிடாரத்தில் இவர் வாழந்த வீடு அவரது நினைவு இடமாக மாற்றப்பெற்று அதில் நூலகம் மற்றும் இவர் பற்றிய குறிப்புகள் பலவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் இவரது உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் இவர் இழுத்த செக்கு இன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

செக்கிழுத்த செம்மல் என்ற அடைமொழி பெற்றவர் இவர்.  தூத்துக்குடி துறை முகத்திற்கு அரசாங்கம் இவரது பெயரைச் சூட்டியுள்ளது. கப்பலோட்டிய தமிழன் அடைமொழியையும் பெற்றவர் இவர் ஆவார்.

மேலும் தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் தெருக்கள், சாலைகள் மற்றும் பல அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பலவற்றிற்கு இவரது பெயர்  சூட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5. 1972 ல் அவரது நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில் இந்தியத் தபால் தலையை இவரின் பெயரில் வெளியிட்டது.

கோயம்புத்தூரில் உள்ள வ..சி பூங்கா மற்றும் வ..சி. மைதானம் மிக முக்கியமான பொது சந்திப்புக்கூடமாக இன்றும் விளங்குகின்றன.

1961 ம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளியானது. அதன் முன்னிணிப் பாத்திரமாக நடிகர் சிவாஜி அவர்கள் நடித்திருந்தார்.

..சிம்பரனார், விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த வழக்கறிஞர், நற்பண்புகளை ஒருங்கே பெற்றவர். அவர் தம் சொத்துக்களை எல்லாம் ஏழை, எளியவர்களின் வாழ்விற்காகப் பயன்படுத்தி, சிறந்த வெல்வந்தராய் பிறந்து வளர்ந்தவர் தன்னுடைய இறுதி நாட்களில் வறுமையால் வாடினாலும் இவர் தம் சுதந்திர தாகம் தணியாமல் உயிர் நீத்தார்.

இவர் 1872 ம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 5 ம் தேதி ஒட்டப்பிடாரத்தில், அன்றைய புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான உலகநாதன் பிள்ளைக்கும் பரமாயி அம்மாளிற்கும் மகனாய் பிறந்தார். இவர் ஒட்டப்பிடாரத்திலும், திருநெல்வேலியிலும் உள்ள பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்றார். பள்ளிப்படிப்பிற்குப் பின் ஒட்டப்பிடாரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். அதன் பின் அவரது தந்தையைப் போல சட்டம் படித்து புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆனார். ஆனால் இவர் தந்தையைப் போல் பணம் படைத்தவர்கள் மட்டும் வாதாடாமல், ஏழைகளுக்காக வாதாடி அதில் வெற்றியும் பெற்றார். ஒரு முறை அவர் தம் வாதத்தால் தன் தந்தையையே தோற்கடித்தார். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளை ஆர்வத்துடன் கற்று அவற்றில் புலமையும் பெற்றிருந்தார்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 
 


January 2020

எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்
தன்னம்பிக்கை மேடை
நேர்மையின் பரிசு
கபடியில் தடம் பதித்த சாதனையாளர்
பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..
பிரசவம்
அன்பும் அறனும் உடைத்தாயின். . .
தடம் பதித்த மா மனிதர்கள்
சொத்து
வெற்றி உங்கள் கையில் – 73
நேரம் ஒரு மூலதனம்..
இளம் இரவிவர்மா…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16
விரட்டுங்கள் மனச்சோர்வை
நில்! கவனி !! புறப்படு !!! – 11
ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
“ சரிவுக்கு தீர்வு… சரியான தேர்வு! ”
அறிவியலா? இலக்கியமா?
சின்னஞ்சிறு சிந்தனைகள்
உள்ளத்தோடு உள்ளம்