Home » Articles » அன்பும் அறனும் உடைத்தாயின். . .

 
அன்பும் அறனும் உடைத்தாயின். . .


ஆசிரியர் குழு
Author:

கவிஞர் கவிநேசன் ,

கோபிசெட்டிபாளையம்

இன்னாருக்கு இன்னார்தான் என்று இறைவன் அருளால் ஆசிர்வதிக்கப்பட்டு அமைத்துக்கொடுக்கப்பட்ட உறவுதான் திருமணம். எல்லாக் காலங்களிலும் பிரச்சினைகளைத் தீர்த்து மகசூல் பெருக்கும் பயிர் என்ற  பொருளில்தான் நம் முன்னோர்கள் திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்று வழங்கினார்கள். படிப்பு, அறிவு, அழகு , வேலை, சொத்து , குடும்பம் ஆகியவற்றையெல்லாம் தீர ஆலோசித்து  , பின்பு பெரியோர்களால் நிச்சயித்து ,  பலர் சாட்சியாக ஏற்படுத்திக்கொண்ட  இந்த பந்தம் வாழும் காலம் முழுமைக்குமான ஒரு தெய்வீக பந்தம். குடும்ப அமைப்பிற்கே பெரும் கவுரவத்தை ஏற்படுத்தித் தரும் மகோன்னதமான உறவுதிருமணம் . அவ்வாறு அமையப்பெற்ற இல்லறம் நல்லறமாக இனிக்க வேண்டுமாயின் , கணவனும் மனைவியும் வாழும் காலம் முழுமைக்கும் மனமொத்து ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் , ஆதாரமாகவும் ,  அன்புடனும் ,  அறத்துடனும் ,  உண்மையாகவும் , இருத்தல் வேண்டும். அப்படி இனிய  மணவாழ்க்கை வாய்க்கப்பெற்றவர்கள் இறைவன் அருளுக்கு பாத்திரமானவர்கள் ஆகிறார்கள்.

பரபரப்பான இன்றைய கால கட்டத்தில் எல்லாமே அவசரம் தான்.  தீர ஆலோசிக்காமல் அவசரமாக முடிவெடுத்து திருமணத்தால் இணைகிறார்கள்.  பிரிவதிலும் அவசரமாகவே முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு முந்துகிறார்கள். சிறு சிறு கருத்து மோதல்களைக்கூடக்  கடந்து வர முடியாமல் மணவாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலத்திற்கு உள்ளாகிறார்கள்.  சரியான புரிதல் இல்லாமல் இல்லற வாழ்வின் இனிமையைத் தொலைத்துவிடுகிறார்கள். சகிப்புத்தன்மையும் , விட்டுக்கொடுத்தலும் அறவே இல்லாததன் காரணமாக தொடக்கத்திலேயே  இல்லற வாழ்வு தொல்லையாய்த் தெரிகிறது. சுவைத்து  மகிழ்வதற்கு முன்பாகவே  கசக்க ஆரம்பித்துவிடுகிறது

திருமணத்தால் ஒரு பெண் , தன் தாய் தந்தையர் ,  குடும்பம் என  எல்லாவற்றையும்  விட்டு  கரம்பிடித்தவனே  காலத்திற்குமான உற்ற துணை என  உள்ளத்தில்  உறுதி  பூண்டு புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டு வருகிறாள். அவளது அனைத்து ஆசைகளையும் , விருப்பங்களையும் , எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது ஒரு  நல்ல கணவனின் கட்டாயக் கடமையாகும்.  மனைவியிடம்  மனம்விட்டு பேசுவதற்கு நேரம் ஒதுக்கி , எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனைவியிடத்தில் மனதாரப் பகிர்ந்துகொள்ளுதல் அவசியமாகும் . மனம்விட்டு பேசுதலும் அதற்கு நேரம் செலவிடுதலுமே மனைவியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பை நிறைவேற்ற  முடியாததிலிருந்து தான்  குடும்பத்தில் பனிப்போர் ஆரம்பமாகிறது.

பொருளீட்டுவதில் மட்டுமே ஒரு ஆணின் முழு கவனமும் இருந்துவிடக்கூடாது . மனைவியின் அன்பை  ஈட்டுவதிலும் கவனம் இருத்தல் வேண்டும்.  பணமே பிரதானம் என்று அதற்கான தேடல்களில் மூழ்கிக்கிடப்பதால் குடும்பக் கப்பல் கரைசேர முடியாமல் தத்தளித்து மூழ்கிவிடும் அபாயமும் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  மனைவியை மகிழ்விக்கவும் குடும்பத்தின் நன்மைக்காகவுமே  நான் கடுமையாக உழைக்கிறேன்என்ற காரணம் ஏற்புடையதல்ல. உழைப்பதாலும் , பொருள் ஈட்டுவதாலும் மட்டுமே குடும்பத்திற்கு கவுரவம் சேர்ந்துவிடாது. இணையோடு இணக்கம் காட்டி இல்லறம் பேணுவதில்தான் குடும்ப கவுரவமே இருக்கிறது  என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருள் தேடி ஓடிக்கொண்டிருப்பதால் வீடுகள் தீவுகளாக்கப்பட்டுவிடுகிறது. இந்த தனித்தீவில் சிக்கிக்கொண்டு தனித்துவிடப்பட்டு அன்பிற்கு ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படி தத்தளித்தும் தவித்தும் கொண்டிருப்பவர்களைக் குறிவைத்து ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. வீட்டின் வாயில் கதவுகள் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் , இணையக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டே இருப்பதால் எவர் வீட்டிற்குள்ளும் எவரின் அனுமதியுமின்றியும் எவரும் உள்ளே நுழைந்துவிடும் வாய்ப்பை இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலமாகவும்  அலைபேசி வாயிலாகவும் அழையா விருந்தாளிகள் நம் படுக்கை அறை வரைக்கும் எளிதாக வந்துவிடமுடிகிறது.  அடுத்தவர்களின் அந்தரங்கங்களை விற்றுக் காசாக்குகின்ற தந்திரங்களை கலிகாலத்து சகுனிகள் கற்றுவைத்திருக்கிறார்கள்.  சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் , தனிமையில் தவித்து அன்புக்கு ஏங்குபவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதுபோல நடித்து , தங்களது வசிய வலையில்  விழ வைத்துவிடுகிறார்கள்.

இந்த இதழை மேலும்


Share

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 
 


January 2020

எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்
தன்னம்பிக்கை மேடை
நேர்மையின் பரிசு
கபடியில் தடம் பதித்த சாதனையாளர்
பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..
பிரசவம்
அன்பும் அறனும் உடைத்தாயின். . .
தடம் பதித்த மா மனிதர்கள்
சொத்து
வெற்றி உங்கள் கையில் – 73
நேரம் ஒரு மூலதனம்..
இளம் இரவிவர்மா…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16
விரட்டுங்கள் மனச்சோர்வை
நில்! கவனி !! புறப்படு !!! – 11
ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
“ சரிவுக்கு தீர்வு… சரியான தேர்வு! ”
அறிவியலா? இலக்கியமா?
சின்னஞ்சிறு சிந்தனைகள்
உள்ளத்தோடு உள்ளம்