Home » Articles » பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..

 
பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..


சிதம்பரம் ரவிச்சந்திரன்
Author:

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டு வரும் துயரக்கதைகளை உலகம் முழுவதிலும் இருந்து இன்று நாம் கேள்விப்படுகிறோம். நாமும் அதை அனுபவிக்கவும் செய்கிறோம். காலநிலையை நம்மால் மாற்றமுடியாது. ஆனால், நாம் வாழுமுறையை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு நம்மைச் சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை நாம் கண் திறந்து பார்க்கவேண்டும். புரிந்துகொள்ளவேண்டும். செயல்படவேண்டும்.

பூமியின் சுவாசப்பைகள் என்று அழைக்கப்படும் அமேசான்மழைக் காடுகள் சில வாரங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நம்மில் எத்தனை பேர் இதைப் பற்றிக் கவலைப்படுகிறோம்? நம்மில் எத்தனை பேருக்கு இதைப் பற்றித் தெரியும்? நமக்குத் தெரிந்தது எல்லாம் அமேசான் என்றால், ஆன்லைன் வணிகம் செய்யும் நிறுவனத்தின் பெயர்தான்! தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேற்றங்கள் நடந்து வரும் போதும், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பற்றிய விஷயங்களில், நம்மில் பலரும் இன்றும் கிணற்றுத்தவளைகளாகவே இருக்கிறோம்.

அமேசான் எரியும்போது, பூமியின் இயற்கைக் வளங்களின் கருவூலமும் சேர்ந்தே சாம்பலாகிறது. இயல்பாக நிகழாத இந்த இயற்கைப் பேரழிவு அங்கு உள்ள சில தொழிலதிபர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மனிதகுலத்தின் மனசாட்சி விழித்துக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத் தலைமுறையினருக்கு சாம்பலாகிவிட்ட பூமியையே நம்மால் வழங்கமுடியும். எங்கோ இருக்கும் அமேசான் காடுகள் எரிந்தால், நமக்கு என்ன என்று நம்மால் இருந்துவிடமுடியாது.

ஒரு இடத்தில் நடக்கும் காலநிலையுடன்தொடர்புடைய சம்பவங்கள் உலகம் முழுவதையும் பாதிக்கிறது. ஆர்டிக் முதல் அமேசான் வரை, இதற்கு முன் ஒருபோதும் நடந்திராதவகையில் தீ தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இனி, ஒருபோதும் மீட்கமுடியாத அளவிற்கு நம் அன்னை பூமி வெந்து உருகிக் கொண்டிருக்கிறது. அமேசான் காடுகள் என்பது பிரேசில், பெரு, பொலிவியா, வெனிசுவெலா, கயானா, கொலம்பியா, சுரினாம், பிரெஞ்சு கயானா, ஈகுவெடார்  ஆகிய ஒன்பது நாடுகளில்பரவியிருக்கும் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள்.

இயற்கையின் இந்த அற்புதக் கருவூலம் பிரேசிலில் 58.4%, பெருவில் 12.8%, பொலிவியாவில் 07.7%, வெனிசுவெலாவில் 06.1%, கயானாவில் 03.1%, கொலம்பியாவில் 07.1%, சுரினாமில் 02.5%, பிரெஞ்சு கயானாவில் 01.4%, ஈகுவெடாரில் 01.0% என்ற அளவில் அமைந்துள்ளது. இந்தக் காடுகளின் மொத்த நிலப்பரப்பு 55 இலட்சம் ச.கி.மீ. பிரபஞ்சத்தின் மாபெரும் கானகங்களான இந்தக் காடுகளின் வயது 5.5 கோடி வருடங்கள் என்று கருதப்படுகிறது. கோடிக்கணக்கான அரியவகை தாவரங்களும், விலங்கினங்களும் இங்கு தோன்றி வாழ்ந்துவருகின்றன.

இங்கு வாழும் தாவரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் யாரும் போற்றி வளர்ப்பது இல்லை. இதன் வரலாறு நீண்ட நித்திரையில் (hibernation) ஆழ்ந்துகிடக்கிறது. இந்தக் காடுகளில், 40,000 தாவரவகைகள், 427 பாலூட்டி இனங்கள், 1300 பறவை இனங்கள், 378 ஊர்வன, 3000 நந்நீர்வாழ் மீன் இனங்கள், 1 இலட்சம் மற்றவகை விலங்கினங்கள் வாழ்கின்றன. அமேசான் என்ற இந்தப் பொக்கிஷம் மரம் முதல் மருந்து வரை மனிதனுக்கு எல்லாவற்றையும் வாரி வழங்கிவருகிறது. விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட இவை எல்லாம் வெறும் 1% மட்டுமே.

அமேசான், ஆதிவாசிகளின் தாய்வீடு எனலாம். 420  வேறுபட்ட ஆதிவாசி இனங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 10 இலட்சம் ஆதிவாசிமக்கள் இங்கு வாழ்ந்துவருகிறார்கள். வெளியுலகுடன் தொடர்பு கொள்ளாத ஏறக்குறைய 50 இனங்களைச் சேர்ந்த ஆதிவாசிமக்கள் இன்றும் காட்டிற்குள்ளேயே வாழ்கிறார்கள். தங்களுக்கு என்று பல்வேறு சிறப்புகளை உடைய மொழிகளும், கலாச்சாரங்களும் இவர்களுக்கு உண்டு. அடர்ந்த உள் வனங்களில், குறைந்த அளவில் வேளாண்மை செய்தும், வேட்டையாடியும் வாழ்கிறார்கள்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 
 


January 2020

எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்
தன்னம்பிக்கை மேடை
நேர்மையின் பரிசு
கபடியில் தடம் பதித்த சாதனையாளர்
பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..
பிரசவம்
அன்பும் அறனும் உடைத்தாயின். . .
தடம் பதித்த மா மனிதர்கள்
சொத்து
வெற்றி உங்கள் கையில் – 73
நேரம் ஒரு மூலதனம்..
இளம் இரவிவர்மா…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16
விரட்டுங்கள் மனச்சோர்வை
நில்! கவனி !! புறப்படு !!! – 11
ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
“ சரிவுக்கு தீர்வு… சரியான தேர்வு! ”
அறிவியலா? இலக்கியமா?
சின்னஞ்சிறு சிந்தனைகள்
உள்ளத்தோடு உள்ளம்