![]() |
Author: ஆசிரியர் குழு
|
என் பெயர் அஜீத்குமார். நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பி. உடையப்பட்டியிலுள்ள மாரிஸ் மேல்நிலை பள்ளியில் படித்தேன். என் பதினொன்றாம் வகுப்பை கே. எஸ். ஆர். வி. கோவகுளம் கரூரில் உள்ள பள்ளியில் முடித்தேன். படிக்கின்ற காலத்தில் எனக்கு கபடியின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதனால் பதினொன்றாம் படிக்கும் போது முழுமையாக கபடி பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டேன். சாதாரணமாக கபடியில் ஈடுபட்ட என்னை, என் உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார், ராஜகோபால் ஆகியோரின் ஊக்குவிப்பின் காரணமாக கபடியில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் அவர்கள் என் விளையாட்டுத் திறனைப் பார்த்து படிப்பிற்கும், விளையாட்டுக்கும் பெரிதும் உதவி புரிந்தார். நான் முன்னேறுவதற்கு தற்போதும் பல உதவிகள் புரிந்து வருகிறார். நான் பனிரெண்டாம் வகுப்பை அரசு ஜெயங்கொண்டான் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் என்னைப் போல் சிறந்த வீரர்கள் இருந்தார்கள். அங்கு திருமுருகன், பாலசுப்ரமணியன் என்னும் பயிற்சியாளரின் உதவியால் போட்டிகளை வென்றுள்ளேன். இவர்கள் செய்த உதவியின் காரணமாகவே நான் பள்ளி பருவத்திலேயே சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தேன். மேலும் என் பயிற்சியினை அதிகப்படுத்திக் கொள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
எனக்கு கபடியின் மீது ஆர்வம் வந்த தன் காரணம் என் அண்ணன் தான். அவர் ஆடும் இடத்திற்குச் சென்று அவர் ஆடுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். தற்செயலாக ஒருநாள் அண்ணன் என்னையும் வந்து விளையாடுமாறு கூறி கபடிக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட்டு ஊக்குவித்து வந்தார். இப்படிதான் என் கபடி விளையாட்டின் பயணம் ஆரம்பம் ஆனது. மேலும் என் பள்ளி பயிற்சியாளரின் ஊக்குவிப்பின் மூலமும் கபடியின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமானது ஏற்பட்டது.
என் கல்லூரி படிப்பானது கோவை கற்பகம் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் நான் பயில என் பள்ளி பயிற்சியாளர் எனக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இக்கல்லூரியில் நான் விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் பி. காம் பயின்று வந்தேன். இக்கல்லூரியில் படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் மூலம் கபடியில் நன்கு பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற என்னால் முடிந்தது. மேலும் கல்லூரி நிர்வாகமும் பேராசிரியரும் இதற்குப் பெரிதும் துணை புரிந்தனர். நண்பர்களும் விளையாட்டின் போதும் போட்டிகளின் போதும் என்னை பெரிதும் ஊக்குவித்தனர்.
விளையாட்டின் மீது இருந்த ஆர்வமானது தன்னை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவும் தன்னை மேலும் வளர்த்து கொள்ளவும் என் பயிற்சியாளரிடமும், முன்னாள் மாணவர்களிடமும், வெற்றிப் பெற்ற சாதனையாளர்களிடமும் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்களின் அறிவுரையின்படி பயிற்சியின் காலமாக காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் மேலும் மாலை 4 மணி முதல் 7 1/2மணி வரை பயிற்சியில் ஈடுபடுவேன்.
இந்த இதழை மேலும்

Share

January 2020




















No comments
Be the first one to leave a comment.