![]() |
Author: கலவை சண்முகம்
|
தாத்தா தனது பேத்தியை மடியிலே வைத்துக் கொஞ்சினார். ஏன்டீ செல்லம் அழறே? எதுக்கு அழறே? பசிக்குதா? இப்பத்தானே பாலைக் குடிச்சே அதுக்குள்ளப் பசிக்குதா? என்ன சொல்றே நீ? பசியெல்லாம் ஒன்னுமில்லியா? சரி… பிறகேன் இந்தச் சிணுங்கல்? கதை சொல்ல்ணுமா? என்ன கதை வேணும்? காக்கா கதை சொல்லட்டா?
ம்…ம்…ம் சொல்லுங்கிறியா? வேணாங்கிறியா?
ம்….ம்…ம்… எல்லாத்துக்கும் ம்…ம்…ம்.. ம்னா எப்படி செல்லம். அப்படியா சரி…சரி காக்கா கல்லு போட்டு தண்ணீர் குடிச்சக்கதையும் வேணாம்..பாட்டி வடை சுட்டக் கதையும் வேணாம் நான் என் சொந்தக்கதையைச் சொல்லட்டுமா? கேக்கிறியா இதோ பாரு உங்கப்பன் எங்கேயோ ஊரைச் சுத்திட்டு இப்பத்தான் வர்றான்… என்னன்னு கேளு. ஏன் மறுபடியும் மறுபடியும்அழறே? கதை சொல்ல இன்னமும் ஆரம்பிக்கலையேன்னா… சொல்றேன்.. சொல்றேன்..ரொம்பத்தான் நீ அவசரப்பட்றே…
உனக்கொரு தாத்தா மாதிரி எனக்கும் ஒரு தாத்தா இருந்தாரு அவர் வேலிக் கணக்கில நிலத்தைச் சம்பாதிச்சி வச்சிருந்தார். நல்ல பல சொந்த பந்தங்கள் எல்லாம் சம்பாதிச்சார்.
என்னோட அப்பா என்ன பண்ணினார் தெரியுமா? அவங்கப்பா சம்பாதிச்ச நெலத்தில நெத்தி வியர்வை சிந்தி உழைச்சிப் பாடுபட்டு ஒண்ணுக்கு நாலா வீடு கட்டினார். சொத்து மேலே சொத்து சேர்த்தார். நான் என்ன பண்ணினேன்னு கேக்கறையா? சமத்துக்குட்டி நீ?
இந்த இதழை மேலும்
Share

January 2020




















No comments
Be the first one to leave a comment.