Home » Cover Story » எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்

 
எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்


ஆசிரியர் குழு
Author:

Rtn.Prof. Dr. ஜமீர் பாஷா

M.S.,FRCS(Eng).,FACS(USA).,FAIS.,FIAMS.,Dip.MAS(Ger.).,FIAGES.,FALS.,

Consultant Laparoscopic & Laser Surgeon

SHANAWAZ  HOSPITAL  தில்லைநகர், திருச்சி.

முச்சங்கம் உதித்த மதுரையில் பிறந்தவர்

முத்தமிழிலும் முகவரி கண்டவர்

தென் தமிழகத்தில் நுண் துளை அறுவைச் சிகிச்சை அறிமுகம் செய்தவர்

உலகெங்கும் பயணம் செய்து சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தவர்

உலகத் தலைவர்களிடம் உன்னத நட்பு கொண்டவர்

வள்ளுவர் முதல் பாரதி வரை முழுமையாகக் கற்றவர்

நோய் என்று வருபவர்களுக்கு சிகிச்சைக்கு

முன்பே புன்னகையால் குணம் படுத்தக்கூடியவர்

வீட்டை அலங்கரிக்க விருதுகளை வைப்போர் மத்தியில

விருதுகளாலே வீட்டைக் கட்டியவர்..

தலைசிறந்த உலக மருத்துவர்களின் மிக முக்கியமானவர் SHANAWAZ HOSPITAL மருத்துவமனையின் நிறுவனர் Rtn.Prof.Dr. ஜமீர் பாஷா அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு….

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பிறந்தது மதுரையில் தான். என்னுடைய தந்தை சுங்க இலா அதிகாரியாக இருந்ததால், என்னுடைய பள்ளிப்படிப்பு கோவை கிக்கானி பள்ளி, ஊட்டி, கோத்தகிரி, என பல இடங்களில்  நடைபெற்றது. பல பள்ளிகளில் படித்தாலும் என்னுடைய எண்ணம் முழுவதும்  படிப்பின் மீதே இருந்தது. எல்லாப் பாடத்திலும் முதன்மை மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றேன். இந்தத் தேர்ச்சியின் மூலம் படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என்ற தத்துவத்தைப் என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்துக் கொண்டேன். வீட்டிலும், பள்ளியிலும் நன்றாகப் படிக்கும் மாணவன் என்று பெயரெடுத்துவிட்டேன்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 1971 ஆம் ஆண்டு மதுரை மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தேன். மருத்துவத் துறையின் மீது இருந்த பற்றுதலால் இறுதியாண்டில் Surgery பிரிவில் முதல் மாணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  அதன் பிறகு அடுத்தடுத்த மருத்துவ பட்ட மேற்படிப்பு தஞ்சாவூரில் எம்.எஸ். படிப்பை படித்தேன். முதுகலைப் பட்டத்திலும் பல்கலைக்கழக முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.

கே:  மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?

என் தந்தைக்கு என்னை ஒரு இ..ப அதிகாரியாகப் பார்க்கவேண்டும் என்ற என்ற ஆசை இருந்தது. அவர்களின் ஆசையை என்னால் நிச்சயம் பூர்த்தியாகக் கூடியதாகவே இருந்தது.  ஒரு நாள் அவர் நன்கு சிந்தனை செய்து அரசு அதிகாரியானால் ஒரு மேலதிகாரி இருப்பார் அவர்களின் கட்டளையிணங்கவே செயல்பட வேண்டும் என்று நினைத்து நீ டாக்டராக வேண்டும் என்று கூறினார். அதோடு டாக்டராகிவிட்டால் எதையும் நீ சுதந்திரமாக  முடிவெடுக்க முடியும். டாக்டர் என்பவர் இறைவனுக்கு இணையாக மதித்துப் போற்றப்படும் பணி என்பதையும் என்னிடம் கூறினார். அன்று அவர் கூறிய வார்த்தை என் மனதில் பசுமரத்தாணி அடித்தாற் போல் ஆழமாகப் பதித்தது.

அவரின் வார்த்தையை என் வாழ்க்கையாக மாற்றி கொள்ள முனைந்தேன். அதற்கு கடுமையான முயற்சி, பயிற்சி, எந்நேரமும் படித்ததன் மூலம் மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது. இன்று உங்களின் முன் ஒரு மருத்துவராக அமர்ந்திருக்கிறேன்.

கே: நுண் துளை அறுவை சிகிச்சை நிபுணரானது பற்றி?

மருத்துவத் துறைகளில் பல பிரிவுகளும், பல முறைமைகளும் இருக்கிறது, நான் படித்த முடித்த காலத்தில் இந்த சிகிச்சை முறை அப்போது தான் அறிமுகமாகிய காலக்கட்டம். இதில் என்னை இணைத்துக் கொள்ள விரும்பினேன். விரும்பினால் மட்டும் போதாது இதிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும்  கற்றுக் கொள்ள விரும்பினேன்.

இதற்கதாக ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்கு உயர்பயிற்சி எல்லாம் பெற்று, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் லேசருக்கான அறுவை சிகிச்சை முறைமைகளை முறையாக கையாண்டு கற்றுக் கொண்டேன்.

தென் தமிழகத்தில் முதன் முறையாக நுண்துளை அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்து வைத்த பெருமை என்னையே சாரும். அது மட்டுமின்றி பித்தப்பை சம்மந்தமான அத்துனை சிகிச்சைகளும் அப்போதே செய்தேன்.

கே:  அறுவை சிகிச்சையை முறையை அறிமுகப்படுத்திய, உங்களின் அடுத்தடுத்த படிநிலைகள் எவ்வாறு இருந்தது?

எனக்கு முன் இந்த அறுவை சிகிச்சையில் யாருமில்லை. நான் தான் முதலாமானவர். இந்த நுண் துளை அறுவை சிகிச்சைக்கென்று எந்தப் பாடத்திட்டமும், பாடப் புத்தகமும் இல்லை.

இதனால் நுண்துளை அறுவை சிகிச்சை அமைப்பு ஒன்றை தொடங்கி அதன் மூலம் பாடப்புத்தகத்தை ஒன்றை உருவாக்கினோம்.  Indian Associan of Gastrointestinal Ento Surgeons மூலம் இரைப்பை, குடல், ஈரல், சிறுநீரகம் போன்ற வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அகில இந்திய அசோஷேசன் ஒன்றை நிறுவி, அதன் தேசிய தலைவராக இருந்து பல திட்டங்களை அறிமுகம் படுத்தினேன்.

இதன் மூலமாக உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்று  பல சொற்பொழிவுகளும், கருத்தரங்குகளும், ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பித்துள்ளேன். அப்போது உலகத் தலைவர்களின் நட்பு எனக்கு கிடைத்தது.

நான் கற்றதைப் பெற்றதை என்னுள்ளே வைத்துக் கொள்ளாமல் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வாக்கிற்கேற்ப இதுவரை 250க்கும் மேற்பட்ட இளம் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கும் இலவசமாகப் பயிற்சி அளித்துள்ளேன். இதுகுறித்தான பல விழிப்புணர்வு கட்டுரைகள், தொலைக்காட்சி பேட்டிகள் என பல நிலைகளில் பரிணமித்துள்ளேன்.

என் மருத்துவப் பயணத்தில் இதுவரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன் என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கே: உலகத் தமிழ் மாநாட்டில் நீங்கள் பங்கு பெற்ற அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் பல துறை வல்லூநர்கள் கலந்து  கொண்டார்கள்.

முத்தமிழ் என்று சொல்லக்கூடிய இயல், இசை, நாடகம் போன்றவற்றில் பல நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதில் நான்காவது தமிழான அறிவியல் தமிழ் என்ற ஒன்றை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அந்த அறிவியல் தமிழில் நுண் துளை அறுவை சிகிச்சை பற்றி என்னை பேச அழைத்தார்கள். நான் முதல் சொற்பொழிவாக அந்த அமர்வில் பேசினேன். அப்போது தான் நுண் துளை அறுவை சிகிச்சை என்னும் வார்த்தையை அறிமுகம் செய்து வைத்தோம்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 
 


January 2020

எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்
தன்னம்பிக்கை மேடை
நேர்மையின் பரிசு
கபடியில் தடம் பதித்த சாதனையாளர்
பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..
பிரசவம்
அன்பும் அறனும் உடைத்தாயின். . .
தடம் பதித்த மா மனிதர்கள்
சொத்து
வெற்றி உங்கள் கையில் – 73
நேரம் ஒரு மூலதனம்..
இளம் இரவிவர்மா…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16
விரட்டுங்கள் மனச்சோர்வை
நில்! கவனி !! புறப்படு !!! – 11
ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
“ சரிவுக்கு தீர்வு… சரியான தேர்வு! ”
அறிவியலா? இலக்கியமா?
சின்னஞ்சிறு சிந்தனைகள்
உள்ளத்தோடு உள்ளம்