காலையில் கிளம்பும்போதே அதற்கான அறிகுறி நன்கு தெரிந்தது. தெற்கு மலைகளில் மேகக்கூட்டம் பொதிபொதியாக குவிந்து கொண்டிருக்க, கூதற்காற்றும் பரவியபடியிருந்தது. ஊரை நோக்கி வடக்கே திரும்பும் போது எப்படியும் நனையாமல் இருக்க முடியாது என்று எண்ணியது சரியாய்ப் போய் விடது.
நல்ல மழை...,
இடையில் விட்டிருக்கும் வெட்டாப்பு நீங்குவதற்குள்ளாக ஆடுகளை விரட்டிக் கொண்டு கட்டுத்தறி சேர்ந்துவிட வேண்டும் எனும் துரித்தில் சுப் பையன் சற்று வேகமாக அதுகளை விரட்டி ஓட்டினான். போட்டிருந்த துணிகள் முழுக்க நனைந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்து. தலைக்கு கொங்காடை யாகப் போட்டிருந்த கோணிச் சாக் கை எடுத்துப் பிழிந்து உதறித் தோளில் போட்டுக் கொண்டான்.
ஊருக்கும் மலைக்கும் மூன்றுமைல் தொலைவு. அடிவாரக் காடுகளில் ஓரம்பாறம் பார்த்து மேய்த்தாலே போதுமென்று நாள் தவறாமல் ஆடுகளை ஓட்டிக் கொண்டு கிளம்பி விடுவான். பத்துப் பனிரெண்டு உருப்படிகளோடு ஆரம்பித்த ஆட்டுக்கிடை இப்போது நூறுக்கு மேல் பெருகிவிடது.
சுப் பையனின் அயன் மாசய்யன்தா்தான் தன்னுடைய இந்த நடுமகனைக் கட்டாயப்படுத்தி இந்தப் பாரம்பரியத் தொழிலைச் சமர்ப்பித்து. நாளாசரிதியாக இதில் லயிப்பு ஏற்பட்டு 'நமக்கு வாய்த்த தொழில் இதுதான் என்பதாக பிடிமானம் உண்டாக்கி விடது. அண்ணன்கா்காரனும், இளைய தம்பிகாரனும் மில் வேலைக்கும், பண்ணையம் பார்க்கவும் என ஈடுபாடு வைத்தனர். சிறுவனாய் இருந்த போதிருந்தே சுப் பையன்தான் தன து அய்யன்கா்காரனோடு ஆடுகளை மேயக்கப் போகும்போது அக்கறையோடு சேர்ந்து கொண்டு காடுகரைகளுக்குப் போய் வருவான்.
“எவங்கிட்டேயும் போயி கையெக்கட்டி, நிக்க வேண்டியதில்லை. நாமுண்டு வேலையுண்டுன்னு இந்த ஆடுகளெக் கருத்தாக் கவுனிச்சு மேய்ச் சாப் போதும். இதுக உன்னெ மேலுக்குக் கொண்டாந்திடும்டா..." மாசயன் இந்த மகனின் மனதில் போட்டு வைத்து தன் போக்கில் வேர் பிடித்து வளர்ந்து விடது.
குடியிருக்கும் ஊரான குளத்துப் பாளையத்துக்கு அருகாமையில் சொந்தமாக மூன்று ஏக்கராப் பூமியும் மாசயனுக்கு உண்டு. அதில் மானாவாரி விவசாயம்தான்! கொள்ளுச்செடிகள் வருசாவருசம் அதைத் தரிசு நிலம் இல்லை என்று சொல்லும் படியாகச் சொற்பற்ப விளைச்சலைக் கொடுத்து வந்தன.
அதற்கென்று ‘முட்டுவளிச்' செலவு எதையும் பெரிதாக கையிலிருந்து போடுவதில்லை. 'மேல் உழவு ஒண்ணு! அடியுழவு ஒண்ணு!' இதுதான் ஒவ்வொரு தடவையும் அது காண்கின்ற பலன். பருவந்தவறாமல் மழைபொழிந்த தருணங்களில் அந்தப் பூமி கொடுத்த மகசூல் குறைவில்லாமல்தான் அமைந்து. இந்தச் சோள விளைச்சலே போதும் எனும்படி இருந்து.
ஊருக்குத் தென்புறமாய் தார் ரோடு ஒன்று கிழக்கு நோக்கி குனியமுத்தூருக்குச் சென்றது. அந்த ரோடு 'ஆலோ பிளாக் இறக்கத்தில் பாலக்காடு மெயின் ரோட்டைத் தொட்டு தெற்கே போனால் மதுக்கரைக்கும் அதுவே வழியாய் இருந்து.
மதுக்கரை சிமெண்ட் கம்பெனிக்கு குளத்துப் பாளையத்திலிருந்து பத்துப் பனிரெண்டு குடும்பத்தார் புருசனும், பெண் சாதியுமாய் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தனர்.
"அவிகதான் குடுத்து வெச்சவிக போங்க! மாசம் பொறந்தா கைநெறையச் சம்பளம். காட்டு வெள்ளாமையைப் பத்திக்கூடக் கவலைப்பட வேணுங்கறதில்லை. வூட்டுச் செலவுக்குப் போக
மிச்சத்தை அப்பிடியே பேங்குல போட்டுறலாமே." என்று சிலாகிப்பு அவர்களைப் பற்றி வலம் வந்து.
“ஏனுங்க... அப்பிடிப் பாத்தா பக்கத்தாலெ எட்டிப் புடிச்சாப்ல இருக்குதுங்களே விஜயலட்சுமி மில்லு. அதுல சேந்தவிகளுக்கு என்னுங்க கொறச்சறச்சலுங்கறே?" "கொறச்சலெல்லா ஒண்ணுங் கெடையாதுங்கோ! அதுமு சிமிட்டிக் கம்பெனியாடம் வெள்ளக்காரங்காலத்துல கட்டுனதல்லுங்கோ..."
“ஆமாமா! இந்தக் கோயமுத்தூர் ஜில்லாவுலயே ஆதி மொதல்லெ ஆன மில்லுகள்லெ இதையெத்தான எல்லாருமே பெருசாச் சொல்றா்றாங்க..." “இந்த ஊர்ல இருந்துதானுங்க அந்த மில்லுக்கு மொத மொதல்னு ஆளுகளெக் கூட்டிட்டுப் போனாங்கொ! அப்பவெல்லாம் நாள் கூலிதானுங்க! அப்புறம் வாரக்கூலின்னு பண்ணுனாங்க. அதுக்கும் பொறகுதா மாச் சம்பளங் கிறதெல்லாம் இங்கே வந்துங்கொ..."
“ச்செ ரித்தான்..."
மாசய்யனோடு மஞ்சிப் பள்ளத்து இறக்கத்தில் தோடத்து பண்ணையம் பண்ணும் காளியபன் பேசிக் கொண்டிருபார். தெற்கு மலைகளில் மழையடித்துச் சதிராடியவாறு வரும் செந்தண்ணீர் சீர்க்குழிப் பள்ளத்தில் விழுந்து மஞ்சிப் பள்ளத்து கலந்து மதுக்கரைக்கு வடபுறத்துக் கிளைவாயக்காலில் சேர்ந்து கொள்ளும்.
கிழக்கே இருந்து மேற்குப் பக்கம் அண்ணாந்து பார்த்தால் மலைக்கரடுகளின் தொடர்ச்சி, தெற்கே அயாமலைக் கணுவாய் வரையிலும் பாறைச் சரங்களாய் நீளவது தெரியும். அந்த அடிவாரக் காடுகள் வரையிலுங்கூட சுப் பையன் தன்னுடைய அய்யனோடு இந்த ஆடுகளை மேயச்சலுக்கு ஓட்டிக் கொண்டு திரிந்திருக்கிறான். எல்லா இடங்களுமே அவன் கால்களுக்கு அத்துபடி.
"கண்ணைக் கட்டிக் காட்டுல கொண்டுபோய் வுட்டாக்கூட வழி மாறாம வந்து சேர்ந்திருவானுங்க..." என்பார் மாசயன் மகனைப் பற்றி பெருமையாக.
மலைக்காற்றின் ஈரப்பத்திலும், அங்கு படர்கிற வெயிலின் கதகதப் பிலும் பயிர்கள் செழிப்பாக வளர்வதைப் போன்றே அங்கு மேய்ந்து செல்லும் பண்டம்பாடிகளும் நன்றாக வளர்நர்ந்தன. ஆடுகள் வயிறாற மேய்ந்து கெழுத்தியாக இருந்தன!
இந்த மகன் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபாட்டோடு லயிப்பதற்கு இரண்டு மூன்று வருடங்கள் பிடித்தன. அந்தக் காடு மேடு பள்ளம் பரப்பெல்லாம் அவனுடைய பாதங்களுக்கு நன்கு பரிச்சயப்பட்டு விட்டன. ஆடுகளின் பின்னால்
காலாற நடந்து திரிவதில் அவனுக்கும் களிப்பாகவே இருந்து.
அத்தோடு இதுமாதிரி மழை, துளி வந்து அகப்பட்டுக் கொள்கிற தருணங்கள் சற்றுச் சிரமத்தை உண்டு பண்ணத்தா்தான் செய்தன என்றாலும், அதை அவ்வளவாக பொருட்படுத்திக் கொளவது இல்லை.
சில சமயங்களில் பசி கூடத் தோணாது. அமைதியாக மலைகளின் பின்னணியில் விரிந்து கிடக்கும் அந்தச் செம்மண் காடுகளின் குளுமையும், மரம்செடி கொடிகளின் மணமும் மனதுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. அந்த மலைகளின் உயரத்தை யும் அகலத்தையும் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கலாம்போல் தோணும்! அனாதி காலந்தொட்டு ஒரு பெரும் வீட்டைப் போல இங்கே வீற்றிருக்கும் இந்த இயற்கை யின் வடிவத்தைப் பற்பலவிதமாய் எண்ணிக் களிபவனாக இருந்தான் சுப் பையன்.
மலைப்பாதைகளில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீர் தாகத்துக்கு ஏற்றதாயிருக்கும். சீர்க்குழிப் பள்ளத்துக்கு மேலாக 'தன்னாசி குகை' என்றொ ரு கல்முகடு உண்டு. அதனைக் கடந்தால் எதிர்ப்படும் சுனை நீரானது கற்கண்டைப் போல் சுவை கொண்டது. அதையெல்லாம் கடந்து மேலேறிச் சென்றா்றால் மலையின் உச்சியை அடைந்து விடலாம்.
அங்கிருந்து தெற்கிலும், வடக்கிலும் பார்க்கும்போது சிறுசிறு திட்டுக்கள்போல் கிராமங்களும் சிறுசிறு சித்திரங்கள் போல் தோட்டந்துரவுகளும் கண்ணாடிச் சுவடுகள் போல் நீர் நிலைகளும் தென்பன்படும்.
மலைகளின் தெற்கே சற்றுத் தொலைவில் ரயில் பாதை மலைப்பாம் பைப் போல் நீண்டு கிடபதும் அவ்வப்போது கேரளத்தை நோக்கிச் செல்லும் மலபார் ரயில்களும், அவை விட்டுச் செல்லும் புகையும் பாறை மீது உட்கார்ந்த படி பார்த்துக் கொண்டிருக்கும் சுப் பையனை புளகாங்கிதப் படவைக்கும்.
"...ஒரு நாளைக்குனாலும் அந்த ரயில்லெ ஏறி உக்காந்துட்டுப் போயி ஆசைதீர அது போகுற எடங்களையெல்லாம் பாத்துட்டு வரோணும்.." என வாய்விட்டுச் சொல்லிக் கொளவான்.
பொழுது இறங்கும் தருவாயில் பறவைக் கூடங்களைப் போல் மேகங்கள் வானத்திலிருந்து இந்த மலைகள் மீது கவிழ் வதை இவனுடைய அம்மா இவனுக்குப் புதுத்துணி அணிவிக்கிறபோது உண்டாகும் உள்ளப் பூரிப்போடு அனுபவித்துப் பார்ப்பான்.

