பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற அன்பரசு என்ற மாணவனை கௌரவிக்க பாராட்டு விழா ஒன்றை அவன் படித்த அரசுப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்து.
ஆசிரியர்கள் எல்லாம் அன்பரசை வெகுவாக பாராட்டி மகிழந்தனர். இறுதியாக பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் பேசுகையில்
“அனைவருக்கும் வணக்கம், உங்கள் முன் வெற்றிப் பெற்று நிற்கும் அன்பரசு என்ற மாணவனின் பெற்றோர்கள் இருவரும் மழைக்குக்கூட பள்ளி பக்கம் ஒதுங்காதவர்கள். அப்படிப்பட்டவர்களின் மகனை இன்று, தமிழகம் முழுவதும் கொண்டாடி மகிழ்கிறார்கள். அது அன்பரசு வியர்வைத் துளிகளால் அவனே...
செய்து கொண்ட தங்க் கிரீடம், அதேபோல் நீங்களும் படித்து நல்ல மதிப்பெண் பெற்று, இந்த பள்ளிக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும், எங்களுக்கும் பெருமை சேர்கர்க்க வேண்டுமென்பதே எங்களின் அதீத விருபமாகும்.
நமது பள்ளிக்கு பெருமை சேர்த்த மரியாதைக்குரிய மாணவன் அன்பரசை உங்கள் முன் ஓரிரு வார்த்தைகள் பேச அன்போடு அழைக்கிறேன்” என்று பேசிவிட்டு தலைமையாசிரியர் முத்துசாமி அமர்ந்தார். மாணவ, மாணவிகள் அவர் பேசி முடித்தற்கும், அடுத்து பேச வர இருக்கின்ற அன்பரசுக்கும் சேர்த்தே கைதட்டி ஆராவாரம் செய்தனர்.
“என்னை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும், நான் படிப்பதற்காக ஆர்வமூட்டிய
ஆசிரியர்களுக்கும், என் நெஞ்சத்திற்கு நெருங்கிய, இனிய நணபர் இளையபாரதிக்கும் மற்றும் என்னை அவ்வப்போது உற்சாகமூட்டிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். ‘நாங்கதான் படிக்காம இபடி காட்டு, மேட்டுல வெயில்ல கிடந்து கஷ்டப்படுகிறோம், நீயாவது நல்லா படிச்சு நல்லதொ ரு உத்தியோகத்துக்கு போபான்னு’ எனக்குள்ளே... அடிக்கடி தன்னம்பிக் கையை ஊட்டி வளர்த்த எனது பெற்றோர்கள் கையால், இந்த பரிசை பெற விரும்புகிறேன்.” என்று பேசியபடி அன்பரசு, தலைமையாசிரியரைப் பார்த்தான். அவர் உடனே அன்பரசுவின் அபா, அம்மாவை வரவழைக்க உத்தரவு பிறப்பித்தார். மீண்டும் அன்பரசு பேசத் தொடங்கினான், “இறுதியாக இன்னொ ரு விசயத்தை நான் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த அளவிற்கு படிப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்,” என்று நிறுத்தியவனை நேருக்கு நேர் பார்க்க தெம்பு திரானியில்லாமல் கூனிகுறுகிப் போனார் சோமசுந்தரம்.
அன்பரசு படிப்பதற்காக தன து கிராமத்திலிருந்து எம். ஆர். பாளையத்திற்கு ஆறு கிலோ மீடர் தூரம் நடந்து போய்தான் படிக்க வேண்டும். அவன் ஊர்க்காரர் சோமசுந்தரம் என்பவர் அந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் வீட்டில்டியூசன் நடத்தினார்.
“தம்பி... ஒங்க பள்ளிக்கூடத்துக்கு வர சோமசுந்தரம் வாத்தியார் கிட போய்டியூஷன் படிபா” என்று அவனது பெற்றோர்கள் அறிவுறுத்தியவுடன், அன்பரசு, சோமசுந்தரத்திடம்டியூஷன் படிக்கப் போனான். அங்கதான் அவன் பட அவமானம் ஏராளம். சோமசுந்தரம் சாதி பார்ப்பவர், அன்பரசு பட்டியல் பிரிவு மாணவன்.
“டேய்... அன்பரசா... கடைக்கு போய் வெத்திலை பாக்கு வாங்கிட்டு வா...”
என்று அவனுக்கு எதாவது வேலை வைத்து வெளியில் அனுப்புவார்.
“அன்பரசு இங்க வாடா...இந்த சாமான்ன பரனி மேல வை, அதை இங்க வை,”
என்று சோமசுந்தரம் மனைவி கலைச்செல்வி அவனிடம் வீட்டு வேலை வைப்பாள்.
“டேய்... அன்பரசா இந்தா கடைக்கு போய், துவரம் பருப்பு கால் கிலோ வாங்கிட்டு வா..” என்று, அவளும் அவனிடம் அடிக்கடி வேலை வாங்குவாள். ‘அவன் நாம் சொல்ற வேலைகளை
அருள்நிதி Jc. S.M.பன்னீர்்செல்வம் கோவை செல் : 8072887131
எல்லாம் தடாமல் செய வேண்டுமென்ற’ சாதிய மனப்பான் மையால் சோமசுந்தரமும், அவர் மனைவியும், அவனை ஒழுங்காகடியூஷன் நேரத்தில் படிக்க விடாமல் வேலை கொடுத்து தொந்தரவு செய்தார்கள். அதை எல்லாம் அவன் சகித்துக்கொண்டு அவர்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு, அவன் கடைக்கு போன நேரத்தில் ஆசிரியர் என்ன நடத்தினார்? என்பதை தன து நண்பனான இளையபாரதியிடம் கேடபான், அவனும் ஆசிரியர் என்ன நடத்தினார் என்பதை ஒன்று விடாமல் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டு அன்பரசு கண்ணும் கருத்துமாக படிப்பில் கவனம் செலுத்தினான்.
“நான் இந்த அளவிற்கு மதிப்பெண் வாங்க காரணமாக இருந்த ஆசிரியர்களில் குறிப்பிடப்பட்டவர் நம்ம சோமசுந்தரம் சார்” என்று அன்பரசு பேசி முடித்தான். தலைமையாசிரியர் எழுந்தவர்,
“அன்பரசு வேண்டுகோளின்படி இந்த சிறப்பு பரிசை மாணவனின் பெற்றோர்களின் பொற்கரத்தால் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்” என்று அவர் பேச, மேடைக்கு வந்த பெற்றோர்களின் காலில் அன்பரசு விழுந்து ஆசீர்வாதம் பெற்றா்றான். அவனை தூக்கி விட குனிந்த போது அவர்களிருவர் கண்ணிலிருந்து கசிந்த ஆனந்த கண்ணீர்த் துளிகள் அவன், கால் மீது விழுந்தவுடன் அவன் உடம்பு சில்லிடது. “அன்பரசு... என்னை மன்னிச்சிடுபா.” சோமசுந்தரம்,
அன்பரசை கட்டியணைத்தா்தார் அவர்பிடி, வழக்கத்தை விட இறுக்கமாக இருந்து.
நன்றி.


