“நாம்; எடுத்த முடிவு.. சரியா..? தவறா..?”
‘அடுத்தவர் போல, வாழ நினைப்பது.. சரியா..? தவறா.?’
“மற்றவர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது… சரியா..? தவறா.?’
‘மற்றவர்களை, பார்த்து, நம்மை மாற்றிக்கொள்ளவது..சரியா.
.தவறா..?’
பொதுவாக, இது போன்ற கேள்விகளுக்கு, யாராலும், ‘இது சரி, இது தவறு” என்று, அவ்வளவு எளிதாக, சரியாகவும், தவறாகவும்,, திட்டவட்டமாக பதில் சொல்லிவிட முடியாது. அதை நிருபித்தல் என்பதும் கடினம். காரணம்,
வாழ்க்கையில்..
எந்த ஒரு செயலின் ஆரம்பத்திற்கும், முடிவுக்கும் “ சரி, தவறு’ என்ற தீர்மானம் உண்டு. அந்த வகையில், நாம் படித்திருக்கும், கல்வி, பிடித்திருக்கும் தொழில், கொள்கை, மற்றும் நட்புகள், உறவுகள் என்று வடிவமைத்திருக்கும் வாழ்க்கை முறைகள் யாவும், நம்மை பொருத்தவரை ‘சரி தவறு’ என்ற இரு முறைகளில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், ‘சரி தவறு’ என்பது மாயை. அவை இரண்டும் அவரவர்களின் , மனநிலை, சூழ்நிலை, பொருத்த, அனுபவ ரீதியான உண்மைகல்ன் வெளிப்பாடு. என்பதால்.
உதாரணமாக….
ஒருவன், ஒரு பச்சோந்தியை, வாழை மரத்தில் பார்க்கிறான். அங்கு அது பச்சை நிறத்தில் உள்ளது. அதனால் அவன் பச்சோந்தி, பச்சை நிறமென்கிறான்.
இன்னொருவன் அதே பச்சோந்தியை , தென்னை மரத்தில் பார்க்கிறான். அது இப்போது, தென்னை மரத்தின் நிறத்தில் உள்ளது. அதனால் அது மா..நிறமானது..என்கிறான்.
இவ்விருவரில்,; யார் பார்த்ததும்,சொன்னதும், சரியானது..?, தவறானது.? இதில் எது உண்மை.?
இருவர் பார்த்ததும், சொல்வதும் ; சரியே!
ஆனால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிறம் மாறுதல், என்பது, பச்சோந்தியின் தன்மை என்பதே உண்மை!
அதனால் அவரவர் கண்ணோட்டத்திற்கும், கருத்துக்கும் ஏற்ப, ‘சரி, தவறு’ என்று முடிவுகள் நிரணயிக்கப்படுகிறது.என்பதுதான் உண்மை.
ஆனால், அதேசமயம், அடுத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதோ, அதன்படி நடப்பதோ முற்றிலும் தவறென்றோ, சொல்லவில்லை. அதை நம் சூழ்நிலைகளில் கொண்டு சென்று ஆராய்தல் நல்லது.
ஒரு ஞானியிடம், ’ குருவே, ஒரு செயலை ‘ சரி, தவறு ‘ என்று எப்படி கண்டு பிடிப்பது.? என சீடர் கேட்டதற்கு, குரு,”ஒருவரிடம் கேட்கும் கேள்விக்கு, பலரின் பதில் பல விதமாக இருக்கும். அதில் எது ‘சரி, தவறு’ என்று கண்டு கொள்வது உன் திறமையைப் பொருத்தது.’ என்றார்.
ஒருகேள்விக்கு, ஒரு பதில் இருக்காது. எல்லாமே ஏறக்குறைய சரியான கருத்துக்களே. இதில் நமக்கு,‘எது சரி. .எது..தவறு’ என்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
‘அவர் சரியானவர்” என்பது சரி. ஆனால்,
‘அவர் என்னைவிட சரியானவர்’ என்பது தவறு.
காரணம்..
இது தன்னம்பிக்கையின் குறைபாடு. தாழ்வு மனப்பான்மையின் மேம்பாடு. நாம் வேறு,அவர் வேறு. இருவரின் சூழ்நிலை. மனநிலைகளும் வேறு. வேறு.என்பதே சரியான நிலைபாடு. நாம் இருக்கும் இயல்பு நிலையி|ருந்து, இல்லாத நிலைக்கு தாவுவது தவறானது.
இப்படி சரியான ஒன்றை ‘தவறாக’ மாற்ற முயற்சிப்பதுதான் நம் பிரச்சனை, தோல்விகளுக்கு மூலக்காரணம்..
நம்மில் பலர் கல்வியோ, தொழிலோ எதிர்காலத்திட்டங்களிலோ, சிறு தோல்வி கண்டு விட்டால், அதை தவறானது என்றும், சரியாக அமைந்து விட்டால், ‘சரியான முறை’ என்றும, தீர்மானித்துக் கொள்கிறோம்.
இந்த இதழை மேலும்