“கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்யிக்கு அலைந்தார் போல் என்பது பழமொழி. சில நேரங்களில் நம்மைச் சுற்றி இருக்கின்ற நல்லவற்றைப் புறக்கணித்துவிட்டு, நல்லதை நாடி அலைவோம் அதுபோல் நம்மைச் சுற்றி எங்கும் இருக்கின்ற ஒரு மூலிகையைக் கண்டுகொள்ளாதோடு, அதை தேவை யற்ற களைச் செடியென பிடுங்கி வீசுவோரும் உண்டு அப்படிப்பட்ட ஒரு மூலிகை தான் “குப் பைமேனி”, அதைப் பற்றிய பகிர்வு இந்த இதழில்….

குப் பைமேனி (Acalyphaindica)

இதற்குப் “பூனை வணங்கி”என்ற பெயரும் உண்டு பூனைகளுக்கு வயிற்றுநோய், அசீரணம் ஏற்படால், இதனைத் தேடி சென்று உண்பதால் இதற்கு இப்பெயர் ஏற்படது .

பயன்படும் உறுப்புகள்

முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. உடல்பருமன், கொழுப்பு இவற்றைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட மருந்து குப் பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

கற்பகற்ப முறைப்படி உண வேண்டிய மூலிகைகளில் குப் பைமேனியும் இடம் பெறுகிறது.

மருத்துவ குணம்: இதன் இலையால், பல்லடிநோய், தீச்சுட புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வாதநோய், மூலம், நமைச்ச்சல், குத்தல், இரைப்பு, மூக்கு நீர் பாய்தல், கோழை ஆகியவை நீங்கும், இதனை

“தந்த மூலப்பிணி தீத் தந்திடு புண் உந்து குன்பம் வாதம் உதிர மூலந் தினவு சூலந் சுவாசம் பீந் சங்கடம். நாலங் கொள் மேனியதனால் போம்” - என்றது தேரன் குணபாடம்.

அ. வீடுகளில் பயன்படுத்தும் முறை. 1.நாடாப்புழுகள் வெளியாக: குப் பைமேனி வேர் ஒரு கைப்பிடி எடுத்துக் கழுவி சுத்தம் செய்து 1000 மி.லி. நீரில் இட்டு 200 மி.லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொடுக்க, புழுக்கள் வெளியாகும். பேதியானால் தயிர்சாதம்